யாழ். போதனாவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தை சேர்ந்த பாதுகாப்பு படையினர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.இதேவேளை நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.