யாழில் பல வர்த்தக நிலையங்களுக்குள் அதிரடியாக நுழைந்த பாவனையாளர் அதிகாரசபை..!!

யாழ்.மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் நிர்ணய விலையில் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும், தரமான பொருட்கள், பதுக்கல் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யவும் பாவனையாளர் அதிகாரசபை சோதனை நடாத்தியுள்ளனர். யாழ்.மாவட்ட செயலரின் உத்தரவுக்கமைய மாதகல், பண்டத்தரிப்பு, சுன்னாகம், மாவிட்டபுரம், வல்வெட்டித்துறை பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் இந்த அதிரடிச் சோதனை நடத்தப்பட்டிருக்கின்றது.
இதேவேளை பல வர்த்தகர்கள் எச்சரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.