கொவிட்-19 தொற்றினால் உலகளாவிய ரீதியில் 13 மில்லியன் பேர் பாதிப்பு..!!

உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 மில்லியனை கடந்துள்ளது.அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இதுவரை ஒரு கோடியே 30இலட்சத்து 36ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், ஐந்து இலட்சத்து 71ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இதுதவிர, 75இலட்சத்து 82ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.வைரஸ் தொற்றினால், மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.அமெரிக்காவில் இதுவரை 34இலட்சத்து 13ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.ஒரு இலட்சத்து 37ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பை எதிர்கொண்ட நாடுகளாக, பிரேஸில், இந்தியா, ரஷ்யா மற்றும் பெரு ஆகிய நாடுகள் உள்ளன.