வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த வாகனம் கோர விபத்து…மயிரிழையில் தப்பிய உயிர்கள்.!!

முறிகண்டி- கொக்காவில் பகுதியில் மரக்கறி ஏற்றிவந்த பட்டா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் ஏ9 வீதியில் குறித்த விபத்து பதிவாகியுள்ளது.வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம் வீதியை விட்டு விலகியதில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.