கொரோனாவின் கோரத்திற்கு மத்தியிலும் இலங்கையில் நடந்த வேலிச்சண்டையில் ஒருவர் அடித்துக் கொலை!

நுவரெலியா இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகலவத்தை தோட்டத்தில் நேற்று(8) இரவு இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இருவரை இராகலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.அதே தோட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.இரு வீடுகளுக்கும் இடையிலான வேலிச் சண்டையே, இக்கொலைக்குக் காரணம் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.