உலகின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கம்..? மனித சோதனையில் சாதனை படைத்தது ரஷ்யா..!!

உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனையை மனிதர்கள் மீது ரஷ்யா முழுமையாக செய்து முடித்து உள்ளது.ரஷ்யாவை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று இந்த செயற்றிட்டத்தை முழுமையாக செய்து முடித்துள்ளது
இதற்கு முன்னரும் பல தடுப்பூசிகள் மனிதர்கள் மீது பரிசோதனை செய்யப்பட்டாலும் அது முழுமை பெறவில்லை. இதற்கான தீர்வுக்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.எனினும், ரஷ்யா இந்த சோதனையை முதன்முதலாக முழுமையாக செய்து முடித்து உள்ளது.ரஷ்யாவை சேர்ந்த செச்செநோவ் பகுதியில் இருக்கும் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி இந்த சாதனையை செய்துள்ளது.மனிதர்கள் மீது இந்த சோதனையை செய்து முடித்து இருக்கிறோம். இதுவரை வெளியான முடிவுகள் சிறப்பாக இருக்கிறது. இந்த சோதனையில் ஈடுபட்ட நபர்கள் வரும் புதன் கிழமையும் அதன்பின் ஜூலை 20ம் திகதியும் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள்.
width=”759″]இந்த மனித சோதனையில் கலந்து கொண்ட நபர்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறார்கள். கடந்த ஜூன் 18ம் திகதி மனிதர்கள் மீதான சோதனையை தொடங்கினோம்.தற்போது இதில் சோதனை முடிந்துள்ளது. உலகிலேயே மனிதர்கள் மீதான கொரோனா தடுப்பு மருந்து சோதனையை செய்து முடித்த முதல் நபர்கள் நாங்கள்தான்” என்று அந்த ரஷ்ய பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும், “நாங்கள் உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது மார்க்கெட்டில் இருந்து மருந்துகள் போலவே இதுவும் பாதுகாப்பான மருந்து என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.இது தொடர்பாக மேலும் ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம். இந்த மருந்தில் மேலும் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்து வருகிறோம்.

இதற்கான உற்பத்தியை அதிகரிக்க இன்னொரு பக்கம் முயன்று வருகிறோம். கடந்த மூன்று மாதமாக இந்த மருந்து தயாரிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வந்தோம். அனைத்து விதிகளையும் பின்பற்றி இந்த சோதனையை செய்து முடித்து இருக்கிறோம்” என்று அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.ஆனால், இந்த மருந்தின் பெயர் என்ன, இது எப்போது மார்கெட்டிற்கு வரும் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.