உரும்பிராயில் கோர விபத்து.. பரிதாபமாகப் பலியான இளம் குடும்பப் பெண்.!!

யாழ்.உரும்பிராய் சந்திக்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 27 வயதான குடும்ப பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் குரும்பசிட்டி வசாவிளான் பகுதியைச் சேர்ந்த அனோஐன் கஜேந்தினி (வயது 27) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உரும்பிராய் சந்திக்கு அண்மையில் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது பட்டாவுடன் மோதி எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.இதில், சம்பவ இடத்திலேயே இளம் குடும்பப் பெண் உயிரிழந்ததுடன் அவரது கணவர் படுகாயம் அடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்து சம்பந்தமான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.