இலங்கையில் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ்..!! சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு..!!

அரசாங்கத்தின் சரியான தீர்மானங்களினால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு முடிந்தது என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம், சுகாதார அமைச்சு, முப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளினால் நாட்டிற்குள் வைரஸ் தொற்று பரவல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்காவிட்டால் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்வடைந்திருக்கக் கூடும் எனவும் அவ்வாறு கூடியிருந்தால் சுகாதாரத்துறையினரால் அந்த நிலைமையை எதிர்நோக்க முடியாது போயிருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் நான்கு மருத்துவமனைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.