அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்..!!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் 4.3 ரிச்டர் அளவுகோலில் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய நிலையம் (NCS) தெரிவித்துள்ளது.அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 2:36 மணியளிவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் ஏற்பட்ட மூன்றாவது பூகம்பம் இதுவாகும்.ஜூன் 28 ஆம் திகதி 4.1 ரிச்டர் அளவுகோலில் நிலநடுக்கம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் டிக்லிபூர் அருகே ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 10 ஆம் திகதி 4.3 , ரிச்டர் அளவுகோலில் அதிகாலை 2.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.