இந்தியாவிலிருந்து யாழ் வந்தவர்களுக்கு கொரோனா அறிகுறி!!கடற்படையினரிடம் சிக்கினர் !!

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக யாழ்ப்பாணம் நுழைய முயன்ற 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.அவர்களில் ஒருவர் கொரொனா அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தொண்டமானாறுக்கு வடக்கே 11 கடல் மைல் தொலைவில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்றுக் காலை சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்றை, கடற்படையினர் அவதானித்து அதை சோதனையிட்டபோது, 4 பேரும் கைதாகினர்.வடமராட்சியை சேர்ந்த மீனவர்களான இருவர், இந்தியாவின் தமிழகத்தில் தங்கியிருந்த இருவரை கடல் மார்க்கமாக நாட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.வல்வெட்டித்துறை, முல்லைத்தீவை சேர்ந்த இருவரே இந்தியாவிலிருந்து திரும்பியுள்ளனர்.முன்னாள் போராளியொருவரே மார்பு வலி, மூச்சுத்திணறல் போன்ற கொரோனா அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் யுத்தகளத்தில் காலொன்றையும் இழந்தவர்.கைதானவர்கள் 21 வயது முதல் 52 வயதிற்கிடைப்பட்டவர்கள்.அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிசார் தெரிவித்தனர்.