தமிழ் இளைஞர்களின் கழுத்தில் தொங்கிய சயனைட் குப்பிகளை அகற்றியமை பெரும் பாக்கியம்…! தேர்தல் பரப்புரையில் பிரதமர் மஹிந்த ..!!

வடக்கு – கிழக்கில் பிள்ளைகளின் கழுத்தில் தொங்கிய சைனைட் குப்பிகளை அகற்ற கிடைத்தமை பாக்கியமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கேகாலை – கலிகமுவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறும் போது;அரசாங்கம், துப்பாக்கியை கையில் எடுத்த பயங்கரவாதிகளுடன் போரிட்டதே தவிர தமிழ் மக்களுடன் அல்ல. சிறு பிள்ளைகளின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த சைனைட் குப்பிகளை அகற்ற முடிந்ததனை பாக்கியமாக கருதுகிறேன்.பயங்கரவாதத்தை நிறைவுக்கு கொண்டு வந்தமையினாலேயே இன்று நாட்டவர்கள் அனைவரும் சுதந்திரமாக தங்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான எங்கள் ஆட்சியின் போது நாட்டிற்கு உணவு வழங்கிய விவசாய மக்களுக்கும், விவசாயத்திற்கும், உரிய அங்கீகாரம் கிடைத்த போதிலும், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த அனைத்து சந்தர்ப்பத்திலும் விவசாயத்தை கவனிக்காமல் விட்டது.
தேசிய டயர் தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் இதுவரையிலும் ஜனாதிபதியின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் அதன் மூலம் தேசிய இறப்பர் விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுவடைய செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.