பஸ், ரயில் பயணிகளின் வசதிக்காக விரைவில் அறிமுகமாகும் புதிய மென்பொருள்..!!

பேருந்துப் பயணிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மை பஸ் செயலியில் எதிர்காலத்தில் ரயில் பயணத் தகவல்களையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ரயில் பயண தகவல்களையும் உள்ளடக்கியதாக ‘மை பஸ்’ செயலி அடுத்த ஒரு மாதத்திற்குள் மேம்படுத்தப்படும் என்று கூறினார்.பயணிகள் போக்குவரத்து சேவைகளை எளிதாக்கும் நோக்கில் பேருந்துகளுக்கான மொபைல் போன் பயன்பாடு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.முதல் கட்டத்தில், மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகள் பற்றிய தகவல்கள் இதில் உள்ளடங்கியுள்ளன. பேருந்து அட்டவணை, பேருந்து பயணம் செய்யு் இடம், கட்டணம் உள்ளிட்ட வசதிகள் தற்போதுஇ இந்த செயலியின் மூலம் கிடைக்கிறது.