அமைச்சரவைக் கூட்டத்தில் சுகவீனமுற்ற ஐவரிகோஸ்ட் பிரதமர் மரணம்..!!

அமைச்சரவைக் கூட்டத்தில் சுகவீனமுற்ற நிலையில் ஐவரிகோஸ்ட் பிரதமர் அமடு டொன் கவுலிபாலி மரணமடைந்துள்ளார். 61 வயதான கவுலிபாலி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டிருந்தார். தற்போதைய ஜனாதிபதி அலசன் அவுடாரா மூன்றாவது தவணைக்கு போட்டிடுவதில்லை என்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கவுலிபாலி இதய நோய்க்காக பிரான்சில் இரண்டு மாதங்கள் சிகிச்சை பெற்ற நிலையில் அண்மையிலேயே நாடு திரும்பி இருந்தார். அவர் 2012 ஆம் ஆண்டு இதய மாற்றுச் சிகிச்சை செய்திகொண்டமை குறிப்பிடத்தக்கது. நாடு சோகத்தில் இருப்பதாக ஜனாதிபதி அவுடாரா குறிப்பிட்டுள்ளார்.வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது சுகவீனமுற்ற கவுலிபாலி மாருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கவுலிபாலியின் மரணம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் அதிக வெற்றிவாய்ப்புக் கொண்டவராக அவர் இருந்தார்.