கொரோனாவிலிருந்து ரஷ்யாவில் சிக்கித் தவித்த 266 இலங்கையர்கள் இன்று நாட்டிற்கு..!!

கொரோனா பரவல் காரணமாக ரஷ்யாவில் சிக்கி தவித்த 266 இலங்கையர்கள் இன்று வெள்ளிக்கிழமை நாடு திரும்பினர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் இவர்கள் அனைவரும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு வருகை தந்தவர்களில் பெரும்பாலானவர்கள் உயர் கல்விக்காக அந்நாட்டில் தங்கியிருந்தவர்களாவர்.யு.எல்.1206 என்ற விமானம் மூலம் இன்று வெள்ளிக்கிழமை காலை 11.15 மணிக்கு இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.