இலங்கை வரலாற்றில் முதல் முறையான காட்டில் நடந்த விசித்திர சம்பவம்..!

மினேரியா தேசியப் பூங்காவில் யானை ஒன்று இரட்டை குட்டிகளை ஈன்ற சம்பவம் இலங்கையில்உள்ள வனவிலங்கு ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இது ஒரு அரிய மற்றும் சிறப்பு சந்தர்ப்பம் என்று தெரிவிக்கப்படுகின்றது.ஏனெனில், இலங்கையின் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் முதல் தடவையாக இரட்டை யானை குட்டிகள் காணப்படுகின்றன என்று வனவிலங்கு பாதுகாப்புத் துறை இயக்குநர் ஜெனரல் டாக்டர் தரகா பிரசாத் தெரிவித்துள்ளார்.இதனை இலங்கையின் யானைகள் குறித்து பாராட்டப்பட்ட ஆராய்ச்சியாளர்களில் ஒருவரும், வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் முன்னாள் இயக்குநர் ஜெனரலுமான டாக்டர் சுமித் பிலாபிட்டியா, மினேரியா தேசிய பூங்காவின் அதிகாரிகளுடன் சேர்ந்து அவதானிப்பு செய்துள்ளார்.