இலங்கையில் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்..!!

இலங்கையில் முகநூலில் வெளியாகும் போலிக் கருத்துக்களை கட்டுப்படுத்த பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு உள்நாட்டில் உள்ள பல நிறுவனங்கள், தரப்புடன் தற்சமயம் பேஸ்புக் நிறுவனம் பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.இதேவேளை நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் திகன வன்முறை போன்ற சந்தர்ப்பங்களிலும் பேஸ்புக் நிறுவனம் வன்முறையை சார்ந்த தகவல்களை முகநூல் மூலம் வெளியாவதை தடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.