குடும்பத் தகராறில் 5 வயதுச் சிறுமியை சரமாரியாக வெட்டிய தந்தை..!! முல்லையில் நடந்த கொடூரம்..!

முல்லைத்தீவு- கேப்பாபிலவு பகுதியில் குடும்ப தகராறில் தந்தையின் வாள்வெட்டுக்கு இலக்கான 5 வயது சிறுமி ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் நடந்தது.குடும்ப தகராறை தொடர்ந்து, தனது 5 வயதான மகள் மீது சரமாரியாக கத்தியால் வெட்டிள்ளார். சிறுமியின் தந்தையான 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.