தலைநகர் கொழும்பில் தமிழர்களின் கல்விக்கான அதிகமான திட்டங்களைச் செயற்படுத்தியவர் மனோ கணேசன்..! தமிழ் மன்றத் தலைவர் பெருமிதம்..!

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் சிங்கள முஸ்லிம் என பேதமின்றி சேவை செய்தவரில் கடந்தகாலங்களில் அதிகம் சேவைசெய்தவரும், அதே சந்தர்ப்பத்தில் அதிகம் பேசப்பட்டவரும் மனோ கனேசன் தான் என மக்கள் தமிழ் மன்றத் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் எந்த அரசியல் தலைவர்களையும் போற்றியதில்லை எந்த அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்கவில்லை. ஆனால் கொழும்பு 1இல் இருந்து கொழும்பு 15 வரையிலான அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் ஏதோ ஒருவழியில் சேவை செய்தவர் என்ற பெருமை மனோ கனேசனையே சாரும். அதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு.அதில், சைவமங்கையர் கழகத்திற்கு ஆற்றிய சேவையும் ஒதுக்கிய நிதியும் அங்கே தனது பிள்ளைகளை படிக்க வைத்திருக்கும் பெற்றோர்கள் நன்கு அறிவர்.

ஆகவே இவரைப்போன்று இன்னும் பலர் இந்த கல்விச்சேவையில் இணையவேண்டும் இவர் போன்றோர் தொடர்ந்து இந்த துறைக்கு அதிகம் சேவை செய்வதன் மூலம் மலையக தமிழர்களாக இருந்தாலும் சரி, கொழும்பில் வாழும் வடக்கு கிழக்கு தமிழர்களாக இருந்தாலும் சரி, பயனடையப்போவது எமது தமிழ் சமூகம் தான் ஆகவே இந்த நேரத்தை நாம் மிக கவனமாக பயன்படுத்தியாகவேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.இந்த நிகழ்வின் போது, கொழும்பு மாவட்டத்தில் தொலைப்பேசி சின்னத்தில் இலக்கம் 7க்கு நாம் நமது அடையாளத்தை தெரிவிக்கலாம் எனவும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.