பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவிக்கு நேர்ந்த சோகம்…கோர விபத்தில் பலி..!!

ருஹுனு பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டில் கற்கும் மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மற்றுமொரு மாணவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று, ஹபராதுவ பிரதேசத்தில் வைத்து குறித்த மாணவிகளின் மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பி சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இந்த விபத்தில் படுகாயமடைந்த இஷானி என்ற மாணவி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த மாணவி 27 வயதுடையவர் என குறிப்பிடப்படுகின்றது. மிகவும் நன்றாக கற்க கூடிய இந்த மாணவி ஒவ்வொரு விடுமுறைக்கும் வீட்டிற்கு வந்து பிரதேச சிறுவர்களுக்கு இலவச வகுப்புகளை நடத்துவார் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த மாணவியின் பூதவுடன் இன்றைய தினம் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.