இது வாயில் போடும் மாஸ்கில்லை வயிற்றினுள் போடும் மாஸ்க்.!!கலக்கும் மதுரைக்காரர்கள்.!

மதுரையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் பரோட்டா விற்பனைக்கு வந்துள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிப்பதால் தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிவதும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது குறித்து விழிப்புணர்வுகளை அரசு தரப்பிலும் போலீஸ் தரப்பிலும் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், மதுரையில் புரோட்டா பிரியர்கள் அதிகம் என்பதால் அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாஸ்க் புரோட்டா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு விற்பனையிலும் அசத்தி வருகிறது.