இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தங்க நகைப் பிரியர்களுக்கு கிடைத்த பேரதிர்ச்சி…!! லட்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..!!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை உச்சபட்ச அளவை எட்டியது. 24 கரட் தங்கத்தின் விலை முதன்முறையாக 100,000 ரூபாவை எட்டியுள்ளது.கொரோனா தொற்று காரணமாக தங்க வரத்து நின்று போனதால் நாட்டில் தங்கத்திற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் விலை உயர்ந்து செல்வதாக தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபை வட்டாரங்கள் தெரிவித்தன.22 கரட் தங்கத்தின் விலை 93,000 ரூபாவாக இன்று உயர்ந்துள்ளது.கொரோனா தொற்று ஆரம்பிம்பித்த சமயத்தில் ரூபா 82,000 முதல் 84,000 வரை இதன் விலை காணப்பட்டது.நிலவும் சூழ்நிலைகளை பொறுத்து விலை மாறுபடும், தங்க வரத்து தொடர்ந்து தடைப்பட்டிருப்பின் விலை மேலும் உயரும் எனத் தெரிகின்றது.