யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கத்திக்குத்து..!! ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்.!

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதில், படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் மீதே கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.