ஆபிரிக்காவிலிருந்து வருபவர்களினால் இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் பேராபத்து.!!

ஆபிரிக்க நாடுகளில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களில் 8 பேர் மலேரியா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.குறித்த 8 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருப்பதாக மலேரியா தடுப்பு பிரிவு வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.பெல்வெஹெர தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5 பேரும் நீர்கொழும்பு வைகால் பிரதேச தனிமைப்படுத்தல் நிலையத்தில் மூவரும் மலேரியா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.2012ஆம் ஆண்டு முதல் முற்றாக மலேரியாவை ஒழித்த நாடாக இலங்கையை ஐ.நா சுகாதார ஸ்தாபனத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.எனினும், வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களால் இலங்கையில் மீண்டும் மலேரியா பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த வருடம் மாத்திரம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 53 பேர் மலேரியா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியுள்ளது.