தாயை இழந்து பரிதவித்த யானைக்குட்டி பாதுகாப்பாக மீட்பு..!

வவுனியா பூவரசன்குளம் பகுதியில் தாயை இழந்து தனிமையிலிருந்த யானைக்குட்டி ஒன்று நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;வவுனியா பூவரசன்குளம் வேலன்குளம் பகுதியில் மூன்று மாதம் நிரம்பிய யானைக்குட்டி ஒன்று நேற்று மாலை தனிமையில் இருப்பதை கண்ட சிலர் பூவரசங்குளம் பொலிஸாருக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.குறித்த பகுதிக்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் யானைக்குட்டியை மீட்டுள்ளதுடன் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் கிரித்தலை யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்லவுள்ளதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.