நாட்டின் 19 மாவட்டங்களில் இன்று ஊரடங்கு தளர்வு..!மாலை 4 மணிக்கு மீள அமுலுக்கு!

19 மாவட்டங்களில் இன்று(9) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மாலை 4 மணிக்கு மீள அமுல் படுத்தப்படவுள்ளது. அந்த மாவட்டங்களில் மீண்டும் 14ஆம் திகதி காலை 6 மணிக்கு தற்காலிகமக தளர்த்தப்பட்டு, அன்றைய தினம் மாலை 4 மணிக்கு அமுல்ப்படுத்தப்படும்.இதேவேளை, யாழ்ப்பாணம்,கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படாமல் தொடரும்.