பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு சற்று முன்னர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை..!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் தற்சமயம் கட்டம் கட்டமாக திறக்கப்பட்டு வருகின்றது.

முதல் கட்டத்தின் படி பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகக்குழு உத்தியோகத்தர்கள் வருகை தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இரண்டாம் கட்டத்தின் படி தரம் 05,11,13 ஆகிய மாணவர்களுக்கான பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.இதன்படி பாடசாலை செல்லும் மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் சுகாதார அமைச்சு விடுத்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.அதேபோல், தினமும் பாடசாலை செல்லும் ஆசிரியர்கள் 01.30 வரை தொடர்ந்தும் பாடசாலையில் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், மேலதிக வகுப்புகளில் ஈடுப்படும் ஆசிரியர்கள் 03.30 வரை கட்டாயம் சேவையில் இருந்து ஆக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை தெரிவித்துள்ளது.