வாழ்கையில் தனியாக நின்று சாதிப்பதற்கு இந்த ராசிக்காரர்களால் மட்டும் தான் முடியுமாம்..!! நீங்களும் இந்த ராசியா..?

இந்த பூமியில் பிறந்த அனைவருமே எப்பொழுதும் ஒருவரையொருவர் சார்ந்துதான் வாழ வேண்டும். நமது வாழ்க்கையின் அனைத்து சூழ்நிலைகளிலும் எப்போதும் மற்றவரின் துணை நமக்கு அவசியமாகும். ஒருவர் எவ்வளவு வலிமையானவராக இருந்தாலும் அவர்கள் நினைத்ததை சாதிக்க கண்டிப்பாக மற்றொருவரின் துணை அவர்களுக்கு நிச்சயமாக தேவையாகும்.

பெரும்பாலானவர்கள் இப்படி இருந்தால் இதற்கு மறுபுறம் இதற்கு நேரெதிராக இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் எந்தவொரு காரியத்தை முடிப்பதற்கும் மற்றவர்களின் துணையை எதிர்பார்க்கமாட்டார்கள் மாறாக தன்னம்பிக்கையால் தானே அனைத்தையும் முடிக்க வேண்டுமென்று நினைப்பார்கள். இவர்கள் மற்றவர்களை நம்புவதும் மிகவும் குறைவுதான். இதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாகவும் இருக்கலாம். இந்த பதிவில் மற்றவர்களின் துணையின்றி தானே காரியங்களை முடிக்கும் ராசிக்காரர்கள் யார் யாரென பார்க்கலாம்.

சிம்மம்:நீங்கள் குழுவாகவும் செயல்படலாம் அல்லது தனியாக செயல்படலாம் ஆனால் ஒருபோதும் உங்களால் சிம்ம ராசிக்கார்கள் போல செயல்படமுடியாது. எந்தவொரு வேலையையும் தொடங்கும்போது இவர்கள் குழுவாகத்தான் தொடங்குவார்கள் ஆனால் அது முடியும்போது இவர்கள் தன் துணை மூலமாகவே அனைத்தையும் சாதிப்பார்கள். மற்றவர்களிடம் உதவிகள் பெற்று அதற்கு நன்றி கூறும் நிலை தனக்கு ஒருபோதும் வரக்கூடாது என்பதில் இவர்கள் உறுதியாய் இருப்பார்கள்.

மேஷ ராசிக்கார்கள் தங்கள் வேலைகள் அனைத்தையும் தானே செய்ய காரணம் எந்த வேலையாக இருந்தாலும் அதனை தன்னை விட யாரும் சிறப்பாக செய்ய முடியாது என்று நம்புவதுதான். இதனை கர்வம் என்று கூறமுடியாது மாறாக ஆர்வம் என்றோ அல்லது விருப்பம் என்றோ கூறலாம். தனக்கு வேண்டியவற்றை செய்து முடிப்பதில் இவர்களுக்கு எந்த தயக்கமும் இருக்காது, தன்னம்பிக்கை உங்களின் சாதனைகளின் மற்றொரு வடிவமாகும்.

கன்னி:இவர்கள் வெற்றியால் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள், அதனால் அதனை பெறுவதற்காக மற்றவர்கள் உதவ வேண்டும் என்று இவர்கள் காத்திருக்கமாட்டார்கள். இவர்களின் சுதந்திரமான தன்னம்பிக்கை இவர்களை எந்த செயலையும் கையில் எடுத்துக்கொள்ளும் தைரியாதை இவர்களுக்கு வழங்கும். அது எந்த காரியமாக இருந்தாலும் சரி. இவர்கள் மிகவும் ரகசியமான ராசிக்காரர்கள் எனவே இவர்கள் தங்களுக்கான இனிமையான நேரம் தனிமையில்தான் என்று நினைப்பார்கள்.

கடகம்:கடக ராசிக்கார்கள் எப்பொழுதும் தங்களுக்கான இடத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். செய்யும் அனைத்து செயல்களும் சிறப்பாக இருக்க வேண்டுமென விரும்புவார்கள், பொதுவாக இவர்கள் மற்றவர்கள் உதவி கேட்பவராக இருப்பார்கள். ஆனால் உங்களின் உதவி அதிகம் தேவைப்படும் முதல் நபர் நீங்கள்தான். அதுவும் உங்கள் நல்லதுக்குதான். மற்றவர்களின் கருத்துக்களும், விமர்சனங்களும் ஒருபோதும் உங்களுக்கு பிடிக்காது.

தனுசு:மற்றவர்களின் துணை எப்பொழுதும் உங்களுக்கு தேவைப்படாத ஒன்று, ஏனெனில் இவர்கள் தவறை கூட தனியாகத்தான் செய்வார்கள். மற்ற ராசிகளை விட அதிக சுதந்திர உணர்வு கொண்ட இந்த ராசியினர் சுயநம்பிக்கையை ஒருபோதும் தவறான குணமாக எண்ணமாட்டார்கள். தனியாக நின்று சாதித்து காட்டுவதே இவர்களின் முதல் தேர்வாக இருக்கும். மற்றவர்கள் தங்கள் வேலையே முடித்து கொடுக்க வேண்டும் என்று இவர்கள் நினைக்கவும் மாட்டார்கள் அதனை பற்றி கவலைப்படவும் மாட்டார்கள்.

மிதுனம்:நீங்கள் மிதுன ராசியாக இருந்தால் உங்களின் முதல் சொந்தம் நீங்கள்தான், உங்களின் முதல் தேவையும் அதுதான். உங்களின் வாழ்க்கை நீங்கள் தீர்மானிப்பதாகத்தான் இருக்கும், சொல்லப்போனால் உங்களின் எதிரியை கூட நீங்களே தீர்மானிப்பார்கள். குழுவாக இருப்பதை விட தனிமையிலேயே நீங்கள் அதிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். பெரிய காரியங்களை கூட தனியாக செய்வதே இவர்களின் சிறப்பு