வீதியை விட்டு விலகி நீர்த் தேக்கத்திற்குள் பாய்ந்த பேரூந்து..!! 21 பேர் பரிதாபமாகப் பலி..!! மேலும் 15 பேர் ஆபத்தான நிலையில்..!

தென் மேற்கு சீனாவில் பேருந்து ஒன்று வீதியை விட்டுவிலகி, அருகில் உள்ள நீர்த்தேக்கத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று(செவ்வாய்க்கிழமை) குய்ஷோ மாகாணத்தின் அன்ஷூனில் ஒரு பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அது வீதியோரத் தடை வழியாக மோதி தண்ணீரில் பாய்ந்தது.குறித்த பேருந்தில் இருந்தவர்களில் பல்கலைக்கழகத்திற்கான வருடாந்த கல்வி நுழைவுத் பரீட்சையில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்ட மாணவர்களும் அடங்குவதாக கூறப்படுகிறது.அந்த நேரத்தில் பேருந்தில் எத்தனை பேர் இருந்தார்கள், அவர்களில் எத்தனை பேர் மாணவர்கள் என்பது தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை.
இந்த விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.