கொரோனாவிற்குப் பின்னர் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்..!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த நான்கு மாதகாலமாக கிரிக்கெட் போட்டிகள் தடைப்பட்டிருந்த நிலையில் இன்று சவுத்தம்ப்டனில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.

இறுதியாக இங்கிலாந்து அணி கடந்த ஜனவரி மாதத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த வருடம் நவம்பர் மாதத்திலும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தன.இந்நிலையில், இன்று ஆரம்பமாகும் ஐந்து நாள் கொண்ட ஆட்டத்தில் ரசிகர்கள் இல்லாமல், வெளிநாட்டு நடுவர்களுக்கு பதிலாக உள்நாட்டு நடுவர்களும் பயன்படுத்தப்படும் அதேவேளை வீரர்கள் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.குறித்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு முதன்முறையாக பென் ஸ்டோக்ஸ் தலைமைதாங்கவுள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜேசன் ஹோல்டர் தலைமை தாங்கவுள்ளார்.