கொழும்பில் கொரோனா நோயாளியுடன் நெருங்கிப் பழகிய மூவர் வைத்தியசாலையில் அனுமதி..!!

வெலிகடைச் சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட கைதி தங்கியிருந்த அறையில் இருந்த 200 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

6 பேருந்துகளில் இராணுவ பாதுகாப்பின் கீழ் புனானி தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இராணுவப் பாதுகாப்பின் கீழ் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.அத்துடன் வெலிக்கடை சிறைசாலையில் குறித்த நோயாளியுடன் நெருக்கமாக செயற்பட்ட அதிகாரிகள் இருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.குறித்த கைதி தங்கியிருந்த அறையில் இருந்த 100 பேர் வரையில் விடுதலை பெற்று வீடு சென்றுள்ள நிலையில் 8 பேர் வேறு சிறைச்சாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.இந்நிலையில், மொனராகலை சிறைச்சாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட 3 பேர் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.