யாழில் வீடொன்றுக்குள் புகுந்து ஆறு ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை.!!

யாழில் வீடொன்றுக்குள் புகுந்த சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த ஒன்பது ஆடுகளை வேட்டையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தச்சம்பவம் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது.இதன்போது, மேலும் ஐந்து ஆடுகள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது;

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவைகலட்டிப் பகுதியில் நேற்றுக் காலை வீடு ஒன்றுக்குள் புகுந்த சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த 14 ஆடுகளை வேட்டையாடியுள்ளது.சம்பவத்தில் 9 ஆடுகள் உயிரிழந்துள்ள நிலையில் 5 ஆடுகள் காயமடைந்துள்ளன. மேலும், சிறுத்தை தப்பிச் சென்றுள்ளதால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.