விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 4 வீத கடன் வழங்கப்படும்! சஜித் அதிரடியாக தெரிவிப்பு..!

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைமையிலான அரசாங்கத்தை ஆட்சியமைத்த பின்னர் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் நூற்றுக்கு நான்கு வீதம் கடன் வழங்கப்படும் என அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சுஜீவ சேனசிங்க, ஹோக்கந்தர பிரதேசத்தில் ஒழுங்கு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சஜித் பிரேமதாச, தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் நாட்டுக்கு சேவை முடியாத பலவீனமான அரசாங்கம்.கொரோனா வைரஸ் காரணமாக சீர்குலைந்துள்ள பொருளாதார சூழலை மீள கட்டியெழுப்புவதற்காக தற்போதைய அரசாங்கத்திடம் எவ்வித புதிய கொள்கைகளும் கிடையாது எனவும் சஜித் பிரேமேதாச குறிப்பிட்டுள்ளார்.