மீனவர்களின் வலையில் சிக்கிய இராட்சத உயிரினம்! அதிகாரிகள் விடுத்துள்ள உத்தரவு..!

நிந்தவூர் பிரதேச கடலில் இன்று காலை கரைவலை மீனவர்களின் வலையில் சிக்கிய 15 அடி நீளமான இராட்சத சுறா மீனவர்களால் கரைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.சுமார் 1500 கிலோ நிறையையுடைய இந்த இராட்சத மீன் கொடுப்புளி சுறா இனத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என மீீனவர்கள் கூறுகின்றனர்.


மேலும் கரை வலையை இழுத்து கரைக்கு வரும் முன்பேதான் இம்மீனை மீனவர்கள் கண்டதாகவும் வலையில் சிக்கியதால் மீனவர்களால் இழுக்க முடியாமல் உழவு இயந்திரத்தின் உதவியைக் கொண்டு கட்டி இழுத்த போது கடல் தொழில் மீன்பிடி அதிகார சபை அதிகாரிகள் அவ்விடத்திற்கு விரைந்து வந்து அம்மீனை வலையில் இருந்து கழட்டி மீண்டு கடலில் விடுமாறு உத்தரவிட்டனர்.

அண்மைக்காலமாக இது போன்ற இராட்சத மீன் இனங்கள் அம்பாற மாவட்ட கடற் பிரதேசங்களில் மீனவர்களின் வலையில் அகப்பட்டும், கரை ஒதுங்கியும் வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது.