சற்று முன் நடந்த கோர விபத்து..!100 அடி பள்ளத்தில் பாய்ந்து பாரவூர்ந்தி விபத்து..!இருவர் படுகாயம்..!

பொலனறுவையில் இருந்து நல்லதன்னி பகுதிக்கு நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று 100 அடிபள்ளத்தில் விபத்து இருவருக்கு பலத்தகாயம் .நானுஒயா-ராதாலை கார்லிபேக் பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.


சம்பவத்தில் பாரவூர்தியின் சாரதியும் அவரது உதவியாளரும் காயமடைந்து நுவரெலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர் .

பொலனறுவையில் இருந்து நுவரெலியா பகுதிக்கு அரிசி ஏற்றிவந்த பார ஊர்தி அரிசியினை நுவரெலியாவில் இறக்கிவிட்டு நல்லதன்னி பகுதிக்கு மீண்டும் திரும்பி வரும் போது ரதாலை குருக்கு வீதி பகுதியில் வைத்து இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நானுஒயா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.