கோவிலை காவல் காக்கும் சைவம் சாப்பிடும் முதலை! கற்பனை கூட செய்து கூட பார்க்க முடியாத சில அதிசய உண்மைகள்!

அரண்மனையைச்சுற்றி அகழிகள் தோண்டி, அதில் முதலைகளை நீந்தவிட்டு பாதுகாப்பு அரண் அமைத்த மன்னர்களைப்பற்றி கேள்விப்பட்டிருப்போம். அந்தக்களத்தில் ஒவ்வொரு கட்டுமானமும், மிகப்பிரம்மாண்டமானதாக இருந்திருக்கிறது.


இப்போது அதிசயமாக பார்க்கும் ஆலையங்களை, அன்றைக்கு சர்வ சாதாரணமாக கட்டிமுடித்திருக்கின்றனர். ஒரு சில கோவில்கள் கட்டிடக்கலையால் புகழ்பெறும், ஒரு சில கோவில்கள் அங்கு நடைமுறையில் உள்ள அதிசயங்களால் பிரசித்திபெறும். அந்த வகையில் கேரளாவில் புகழ்பெற்ற கோவில் குறித்து பார்க்கலாம்.

ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். கேரள மாநிலம் காசர்கோட் பகுதியில் உள்ள அனந்தபுரா கோவில் உலக பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனிச்சிறப்பு இருப்பதைப்போல, இந்த கோவிலுக்கென்றே ஒரு தனித்துவம் உண்டு. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு முதலை கோவிலை பாதுகாத்து வருகிறதாம். பொதுவாக முதலைகள் என்றாலே, அவை அசைவ பச்சிகள் வரிசையில் வரும். ஆனால் இந்த முதலையோ, கோவில் குளத்தில் உள்ள மீன்களைக்கூட உண்பதில்லை என்கின்றனர்.

பபியா என்ற செல்லப் பெயரிட்டு அழைக்கப்படும் இது, 150 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில் குளத்தில் வாழ்ந்து வருவதாக தெரிகிறது. ஒருவேளை வயது மூப்பின் காரணமாக இந்த முதலை இறந்து போனாலும், இன்னொரு முதலை வந்து விடுமாம். ஆனால் இதுவரைக்கும் ஒரு முதலைக்கும் மேல், குளத்தில் பார்த்ததில்லை என்கின்றனர் பக்தர்கள். சாமிக்கு அபிஷேகம் செய்யும் போது படைக்கப்படும், சாதம் மற்றும் வெல்லம் கலந்த உருண்டையை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்கிறது.

கோவிலை சுற்றி வேறு நீர்நிலைகள் எதுவும் இல்லாத நிலையில், முதலை எப்படி கோவில் குளத்திற்குள் வந்திருக்கும் என்று தெரியவில்லை. 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் கூறும் நிலையில், அப்போதிருந்து முதலை கோவிலை காவல் காத்து வருவதாக சொல்லப்படுகிறது. முதலைகள் மூர்க்கத்தனமாக செயல்படும் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம். இதுவரையில் கோவில் குளத்திற்கு நீராட வரும் பக்தர்களை, பபியா ஒருமுறை கூட தாக்கியதில்லை என்கின்றனர். நிச்சயமாக இது அதிசயம் தான்.