இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….ஆரம்பமானது கருத்துக் கணிப்பு…இன்னும் ஆறு தினங்கள் மட்டுமே..!

2020 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சைகளை நடத்தும் தினம் தொடர்பாக மக்களின் கருத்தை அறிய கருத்துக் கணிப்பை நடத்த கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 7 ஆம் திகதி பரீட்சைகளை நடத்துவது குறித்து மக்களின் கருத்தை அறிய இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட உள்ளது.

கல்வியமைச்சரின் ஆலோசனைக்கு அமைய இணையத்தளம் வழியாக நடத்தப்படும் இந்த கருத்து கணிப்பு கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகியதுடன், எதிர்வரும் 10 ஆம் திகதி முடிவடையவுள்ளது.இது தொடர்பாக தமது கருத்துக்களை முன்வைப்பதற்காக https://forms.gle/HTaoMt6fe2sqQxXJ7 இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறும் கல்வியமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.