பிரித்தானியாவில் திடீரென மாயமான இளம்பெண்!! புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டு கதறும் குடும்பத்தினர்.!!

பிரித்தானியாவில் லெய்டன்ஸ்டோன் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவந்த இளம்பெண் காலையில் நடைப்பயிற்சிக்கு சென்றவர் மூன்று நாட்களாக திரும்பாத நிலையில், புகைப்படம் வெளியிட்டு குடும்பத்தார் உதவி கோரியுள்ளனர்.லெய்டன்ஸ்டோன், வால்தம் வனப்பகுதி அருகே குடியிருக்கும் புருனல் பல்கலைக்கழக பட்டதாரி 23 வயது பர்தீப் கவுர் பிளஹா என்பவரே மாயமாகியுள்ளார்.புதனன்று பகல் சுமார் 10.30 மணியளவில் வழக்கமான நடைப்பயிற்சிக்கு சென்றதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.தமது மொபைல்போனை எடுத்துச் சென்றுள்ளதாக நம்பும் குடும்பத்தினர், ஆனால் அது தற்போது செயல்படவில்லை எனவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.அவர் மாயமானதில் இருந்து நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ பர்தீபிடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை எனவும் கூறப்படுகிறது.பர்தீப் தொடர்பில் அவர் புகைப்படத்துடன் தகவல் வெளியிட்ட குடும்பத்தினர், பொதுமக்களில் எவரேனும் இவர் தொடர்பில் தகவல் தெரியவந்தால் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.பொதுவாக முக்கால் மணி நேரத்தில் குடியிருப்புக்கு திரும்பும் பர்தீப் மூன்று நாட்களாக குடியிருப்புக்கு திரும்பாதது, பெற்றோரையும் நண்பர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.