இயக்கச்சியில் பாரிய வெடிப்புச் சம்பவம்..படுகாயமடைந்த நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி..!

கிளிநொச்சி- இயக்கச்சிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருக்கும் பளை பொலிஸார் நேற்று இரவு குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்தில் காயமடைந்த நபர் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது, அது தவறுதலாக வெடித்திருக்கலாம் எனவும் கூறியுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.காயமடைந்தவரது வீட்டிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.