இலங்கை மக்களுக்கு ஓர் மகிழ்ச்சி தரும் செய்தி…கொரோனாவிலிருந்து விரைவில் முழுமையாக விடுதலை பெறப் போகும் இலங்கை..!!

வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 195 ஆக குறைந்துள்ளது.

இலங்கையில் இதுவரை 2,069 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்களில் 1,863 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 90% ஐ தாண்டியுள்ளது. நாட்டில் இதுவரை 11 கொரோனா மரணங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.