ஏ-9 கண்டி வீதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து…பரிதாபமாகப் பலியான உயிர்..!!

புளியங்குளம் சன்னாசிப்பரந்தன் பகுதியில் மாடொன்றை மோதிக் கொன்றுள்ளார் கார்ச் சாரதி. விபத்தில் கார் கடுமையான சேதமடைந்தது. சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.இன்றையதினம் காலை10 மணியளவில் முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி வந்த கார் வீதியின் எதிரே சென்ற மாட்டை மோதித் தள்ளியது. விபத்தில் மாடு உயிரிழந்துள்ளது.விபத்தில் கார் கடுமையான சேதமடைந்த நிலையில், அதன் சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளார்.விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.