இலங்கையை போன்று பிரித்தானியாவிலும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டம் !! பொலிஸாரிடம் வசமாக சிக்கிய பெண் தீவிரவாதி..!!

பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ள முதல் பெண் தற்கொலை குண்டுதாரி இலங்கையின் ஈஸ்டர் தின தொடர் குண்டு வெடிப்பை போன்று பிரித்தானியாவின் செயின்ட் போல்ஸ் கதீட்ரல் தேவாலயத்தின் மீது தாக்குதலை மேற்கொள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு திட்டமிட்டதாக அதிர்ச்சித் தகவலை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

14 ஆண்டுகள் சிறை தண்டணை அனுபவித்துவரும் ஹேஸைச் சேர்ந்த சபியா ஷேக், ( வயது – 36) பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ள முதல் பெண் தற்கொலைகுண்டுதாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேற்கு லண்டனில் உள்ள ஹேய்ஸைச் சேர்ந்த இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.ஹெராயின் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள நிலையில் , ஒருவரைக் கொல்வதைவிடவும் கொடூரமான செயல்களை செய்வதை விரும்புவதாக பொலிஸ் விசாரணையின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பாணியில் விரலை மேலே உயர்த்தி காண்பித்து தெரிவித்துள்ளார். இவர் இரண்டு குண்டுகளை தமது உடலில் பொருத்தி கொண்டு லண்டன் அண்டர்கிரவுண்டில் தன்னைத்தானே வெடிக்கச் செய்ய விரும்பியதாகவும் பெலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.பொலிஸாருக்கு சந்தேகம் எழும் வகையில், செயற்பட்டதையடுத்து கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.