சற்று முன்னர் யாழ்-நல்லூர் வீதியில் விபத்து.!!காயங்களுடன் வைத்தியசாலையில் முதியவர்..!!

யாழ்.நல்லூர் கோவில் வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வீதியின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் பக்க கதவினை திடீரென திறந்து இறங்க முற்பட்ட போதே விபத்து இடம்பெற்றுள்ளது.அவதானம் இல்லாமல் திடீரென கார் கதவினை திறந்ததால் பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் கார் கதவுடன் மோதுண்டுள்ளது.இவ்விபத்தில் 60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் தலையில் படுகாயமடைந்த நிலையில் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.குறித்த விபத்தினை எற்படுத்திய காரின் உரிமையாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சகோதரர் தி.பரமேஸ்வரனுடையது என்று தெரிவித்துள்ள பொலிஸார், குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.