கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தில் தரையிறங்கிய சீனாவின் கிரேன்கள்..!! இந்தியாவிற்கு முதலாவது சறுக்கல்.!!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் நிறுவதற்காக கொண்டு வரப்பட்ட சீனாவின் பாரந்தூக்கிகள் 3 நேற்று தரையிறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.கிழக்கு முனையத்தில் சீனாவின் பாரந்தூக்கிகளை நிறுவது பற்றிய சர்ச்சை அண்மைக்காலமாக நிலவி வருகிறது. 3 ஊழியர்கள் பாரந்தூக்கியின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். சீனாவின் பாரந்தூக்கிகள் நிறுவப்பட வேண்டுமென அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். நேற்று பிரதமருடன் நடந்த பேச்சை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

அத்துடன், 3 பாரந்தூக்கிகளையும் தரையிறக்க பிரதமர் உத்தரவிட்டார்.இதையடுத்து, கடந்த 13 நாட்களாக தரையிறக்க முடியாமல் காத்திருந்த சீனாவின் பாரந்தூக்கிகள் தரையிறக்கப்படும் பணி ஆரம்பித்தது. நேற்று ஒரு பாரந்தூக்கி தரையிறக்கப்பட்டது. ஏனையவை இன்று அல்லது நாளக்குள் தரையிறக்கப்படும் என தெரிகிறது.இந்த பாரந்தூக்கிகளை தரையிறக்க இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி நேற்று தரையிறக்கப்பட்டுள்ளது.இலங்கையின் புதிய ஆட்சியில் இந்தியாவிற்கு ஏற்பட்ட முதல் சறுக்கலாக இது கருதப்படுகிறது.இதேவேளை, கொழும்பு துறைமுக முனையத்தின் பணிகளை மேற்கொள்ள கடந்த அரசாங்கத்தால் கையெழுத்திடப்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக சிக்கல் இருப்பதாக இலங்கை துறைமுகங்கள் திணைக்களத்தின் தலைவரான ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தபோது, எந்தவொரு புரிதலும் இல்லாமல் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

ஒப்பந்தத்தில் இலங்கை 51% ஜப்பான் 44% இந்தியா 5% பங்குகளை கொண்டுள்ளன. இந்த நிலையில், கிழக்கு முனையத்தில் சீனாவிலிருந்து கொண்டு வரப்படும் மூன்று பாரந்தூக்கிகள் நிறுவப்படுவதை இந்தியா எதிர்த்தது. கப்பல் மூலம் எடுத்து வரப்பட்ட கிரேன் கடந்த 13 நாட்களாக இறக்கப்படாமல் காத்திருந்தது. சீன பாரந்தூக்கிகளை நிறுவ ஜப்பான் சம்மதித்திருந்தது.