தமது அதீத திறமையினால் மலையக மண்ணிற்கு பெருமை சேர்த்த மூன்று தமிழ் யுவதிகள்…!!

மலையகத்தில் இருந்து மேலும் மூன்று யுவதிகள் சட்டத்தரணிகளாக இலங்கை உயர் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

அக்கரபத்தனை தொன்பில்ட்டை தோட்டத்தை சேர்ந்த அருணாசலம் லோகலெட்சுமி, தலவாக்கலை கிரேட் வெர்ஸ்டன் தோட்டத்தை சேர்ந்த சந்தனம் விஷ்வாணி மற்றும் நானுஓயா டெஸ்போட் லோர்ன் தோட்டத்தை சேர்ந்த உதயகுமார் வசந்தமலர் ஆகியோரே சட்டத்தரணிகளாக சத்தியபிரமாணம் செய்துகொண்டார்கள்.இதனூடாக அவர்கள் தாம் பிறந்த மண்ணிற்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளமை மலைய மக்களிற்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.