யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 103 பேரும் அதிரடியாக மதவாச்சிக்கு இடமாற்றம்..!!

யாழ்.கொடிகாமம் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 103 கொரோனா சந்தேகநபர்கள் மதவாச்சி பூநாவே கடற்படைமுகாமில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து கடல்வழியாக நெடுந்தீவுகள் நுழைந்த நபர் ஊர்காவற்றுறை நீதிமன்றின் உத்தரவையடுத்து விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், நேற்று இரவு அதிரடித் தீர்மானமாக விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 103 பேர் மதவாச்சி பூநாவே கடற்படை முகாமிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துசெல்லப்பட்டிருக்கின்றனர்.மேலும், நேற்று தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்லப்பட்டவர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றார். இந்நிலையில் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையம் தற்போது வெறுமையாகியுள்ளது.