கொரோனா வைரஸ் தொற்றால் பிரான்ஸில் யாழ். இளைஞன் உயிரிழப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாண இளைஞன் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம்- மல்லாகத்தை பிறப்பிடமாக கொண்ட பாலச்சந்திரன் அஜந்தன் எனும் 40 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞன், சுமார் 1 மாத காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மேலும், இந்த இளைஞரின் இறுதிச்சடங்குகள் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளின் கீழ் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.