இந்தியாவிலிருந்து நெடுந்தீவு பகுதியில் கரையொதுங்கிய தெப்பத்தால் பரபரப்பு!

இந்தியாவிலிருந்து வாசி தெப்பத்தின் உதவியுடன் நபர் ஒருவர் கடல் வழியாக பயணித்து நெடுந்தீவு பகுதியில் கரையொதுங்கியுள்ளார்.நேற்று மதியம் 12 மணியளவில் இவர் நெடுந்தீவின் தென் பகுதி கடற்கரையில் கரையொதுங்கியுள்ளார்.


கொரோனா தொடர்பான அச்சமான சூழ்நிலை நிலவிவரும் நிலையில் இவர் கரையொதுங்கியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவ்வாறு கரையையடைந்த போது அப்பகுதி மீனவர்கள் அவதானித்து உடனடியாக பொலிஸருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதளையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் விரைந்து சென்றுள்ளனர்.

நெடுந்தீவில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.அதனையடுத்து அவரை விடத்தல் பளையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.