மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள மிக முக்கிய அறிவிப்பு..!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.இதனடிப்படையில் எதிர்வரும் காலங்களில் தொலைபேசி ஊடாக நேரகாலத்துடன் திகதிகளை ஒதுக்கிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இது தொடர்பாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சீ.அலஹகோன்,


கோவிட் – 19 வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமைகள் காரணமாக ஒரு சில வரையறைகளுக்கு உட்பட்டு செயற்பட்டு வந்த எமது திணைக்கள செயற்பாடுகளை நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு 2020.07.01ஆம் திகதி தொடக்கம் வழமையான விதத்தில் பேணிச் செல்ல தீர்மானிக்கப்பட்டதென்பதை இத்தால் அறிவிக்கின்றேன்.மேலும், இதனடிப்படையில் எதிர்வரும் காலங்களில் தொலைபேசி ஊடாக நேரகாலத்துடன் திகதிகளை ஒதுக்கிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை.

எனினும் அலுவலக வளாகத்திற்குள் வருகின்ற சேவை பெறுநர்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய முகக்கவசங்களை அணிதல், கிருமித்தொற்று நீக்கம் மற்றும் சமூக இடைவெளிகளை பேணுதல் உட்பட அனைத்து சுகாதார ஆலோசனைகளையும் பின்பற்றுதல் வேண்டும்.இதன் காரணமாக ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துகின்றேன் என தெரிவித்துள்ளார்.இதேவேளை, மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளை பெற்றுக் கொள்ள வருபவர்கள் ஏற்கனவே திகதிகளை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.