சற்று முன்னர் யாழில் நடந்த கோர விபத்து.! ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் !

சற்றுமுன்னர் யாழ் உரும்பிராயில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேகமாக சென்றுள்ள பேருந்தானது, முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் முச்சக்கரவண்டியில் வேகமாக சென்ற நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் உரும்பிராய் பிரதேச சபைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.