யாழ் மண்டைத்தீவு பகுதியில் 400 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு..!

யாழ்ப்பாணம் – மண்டைதீவு கடற்பரப்பில் 421 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.குறித்த கடற்பரப்பிலிருந்து இன்றைய தினம் மண்டைதீவு கடற்படையினரால் அந்த பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

எனினும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.அநாமதேயமாக நின்ற படகினை சோதனை செய்த போதே பொதி செய்யப்பட்ட நிலையில் கஞ்சா காணப்பட்டுள்ளது.இதனையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் கஞ்சா பொதிகள் ஒப்படைக்கப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.